மது குடிக்க பணம் தராதவரை அரிவாளால் வெட்டியவர் கைது

தேனி : மது குடிக்க பணம் தராதவரை அரிவாளால் வெட்டிய சுதாகர் 26, என்பவரை போலீசார் கைது செய்தனர்.

வருஷநாடு மயிலாடும்பாறை தென்பழனி காலனி சுரேஷ் மகன் மோகன்தாஸ் 18. தேங்காய் உரிக்கும் தொழிலாளி. இவரை மயிலாடும்பாறை வடக்குத்தெரு முத்தையா மகன் சுதாகர் 26, மதுபோதையில் வந்து, மது குடிக்க பணம் கேட்டார். மோகன்தாஸ் மறுத்ததால் சுதாகர் மிரட்டி சென்றார்.

பின் மோகன்தாஸ், தென்பழனி காலனி பகுதியில் சென்ற போது அங்கு வந்த சுதாகர் அரிவாளால் மோகன்தாசின் பின் தலையில் வெட்டி தப்பினார்.

பலத்த காயமடைந்த மோகன்தாஸ்,தேனி அரசு மருத்துவக்கல்லுாரியில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார். மோகன்தாஸ் புகாரில் கடமலைக்குண்டு போலீசார் சுதாகர் மீது கொலை முயற்சி வழக்கில் கைது செய்தனர். சுதாகர் மீது மதுரை நகர் செல்லுார், கூடல்புதுார், டி.ராமநாதபுரம் போலீஸ் ஸ்டேஷன்களில் கொலை மிரட்டல், திருட்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement