தமிழகத்தில் ராம்சார் தளம் எண்ணிக்கை 20 ஆக அதிகரிப்பு; எந்த இடத்தில் இருக்கு தெரியுமா?


சென்னை: தமிழகத்தில் உள்ள 'ராம்சார்' தளங்களின் எண்ணிக்கை, 20 ஆக அதிகரித்துள்ளது. புதிதாக ராமநாதபுரம் மாவட்டத்தில் தேர்தங்கல் மற்றும் சக்கரக்கோட்டை பறவைகள் சரணாலயங்கள் ராம்சார் தளமாக அறிவிக்கப்பட்டுள்ளன.


சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த சதுப்பு நிலங்கள், ராம்சார் தளங்களாக அறிவிக்கப்படுகின்றன. சுற்றுச்சூழல் முக்கியத்துவம், உயிரியல் பன்முகத்தன்மை வாய்ந்த சதுப்பு நிலங்கள் இவ்வாறு தேர்வு செய்யப்பட்டு அறிவிக்கப்படுகின்றன.
சதுப்பு நிலங்களை பாதுகாத்து பராமரிப்பது தொடர்பான சர்வதேச ஒப்பந்தம், 1971ம் ஆண்டு கையெழுத்தான ஈரான் நாட்டின் ராம்சார் நகரம் நினைவாக இந்த பெயர் சூட்டப்படுகிறது.

தற்போது, புதிதாக ராமநாதபுரம் மாவட்டத்தில் தேர்தங்கல் மற்றும் சக்கரக்கோட்டை பறவைகள் சரணாலயங்கள் ராம்சார் தளமாக அறிவிக்கப்பட்டுள்ளன. அதேபோல், ஜார்க்கண்ட் உத்வா ஏரி, சிக்கிம் ஹேச்ரோ பள்ளி பகுதியும் ராம்சார் தளமாக அறிவிக்கப்பட்டுள்ளது.



அந்த வகையில், நாடு முழுவதும் ராம்சார் தளங்கள் எண்ணிக்கை 93 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் இந்த எண்ணிக்கை 18ல் இருந்து 20 ஆக உயர்ந்துள்ளது.
முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட அறிவிப்பில், ''தமிழகத்தில் மேலும் 2 இடங்கள் ராம்சார் தளமாக அறிவிக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் மொத்த ராம்சார் தளங்களின் எண்ணிக்கை 20 ஆக உயர்ந்துள்ளது' என தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் உள்ள 20 ராம்சார் தளம் விவரம் பின்வருமாறு:



1. நாகப்பட்டினம் மாவட்டம், பாயிண்ட் கலிமேர் வனவிலங்கு மற்றும் பறவைகள் சரணாலயம்


2. ராமநாதபுரம் மாவட்டம், மன்னார் வளைகுடா கடல் உயிர்க்கோள காப்பகம்


3. கன்னியாகுமரி மாவட்டம், வேம்பன்னூர் சதுப்பு நில வளாகம்


4. ஈரோடு மாவட்டம், வெள்ளோடு பறவைகள் சரணாலயம்


5. திருவாரூர் மாவட்டம், உதயமார்த்தாண்டபுரம் பறவைகள் சரணாலயம்


6. செங்கல்பட்டு மாவட்டம், வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம்


7. திருநெல்வேலி மாவட்டம், கூந்தன்குளம் பறவைகள் சரணாலயம்



8. செங்கல்பட்டு மாவட்டம், கரிகிலி பறவைகள் சரணாலயம்


9. சென்னை மாவட்டம், பள்ளிக்கரணை மார்ஷ் காப்புக்காடு


10. கடலூர் மாவட்டம், பிச்சாவரம் மாங்குரோவ்


11. ராமநாதபுரம் மாவட்டம், காஞ்சிரங்குளம் பறவைகள் சரணாலயம்


12. ராமநாதபுரம் மாவட்டம், சித்திரங்குடி பறவைகள் சரணாலயம்


13. கன்னியாகுமரி மாவட்டம், சுசீந்திரம் தேரூர் சதுப்பு நில வளாகம்


14. திருவாரூர் மாவட்டம், வடுவூர் பறவைகள் சரணாலயம்


15. அரியலூர் மாவட்டம், கரைவெட்டி பறவைகள் சரணாலயம்


16. நீலகிரி மாவட்டம், லாங்வுட் ஷோலா ரிசர்வ் காடு


17. திருப்பூர் மாவட்டம், நஞ்சராயன் பறவைகள் காப்பகம்




18. விழுப்புரம் மாவட்டம், கழுவேலி பறவைகள் காப்பகம்



19. ராமநாதபுரம் மாவட்டம், தேர்தங்கல் பறவைகள் சரணாலயம்


20. ராமநாதபுரம் மாவட்டம், சக்கரக்கோட்டை பறவைகள் சரணாலயம்.

Advertisement