பாமர மக்கள் பயன்பெறும் திட்டங்களை நிறைவேற்றும் இஸ்ரோ: தலைவர் நாராயணன் பெருமிதம்

1


நாகர்கோவில்: பாமர மக்கள் பயன்பெறும் திட்டங்களை இஸ்ரோ செய்து வருகிறது என இஸ்ரோ தலைவர் நாராயணன் தெரிவித்தார்.



நாகர்கோவிலில் நிருபர்கள் சந்திப்பில் இஸ்ரோ தலைவர் நாராயணன் கூறியதாவது: 100வது ராக்கெட்டை இஸ்ரோ வெற்றிக்கரமாக ஏவியது இந்திய நாட்டுக்கு ஒரு பெருமையான நிகழ்ச்சி ஆகும். 1979ம் ஆண்டு முதன் முதலில் எஸ்.எல்.வி.,3 ராக்கெட் விண்ணில் ஏவப்பட்டது.


இது எல்லோரும் இணைந்து செய்யும் டீம் வேலை. இதற்கு இஸ்ரோவில் உள்ள அனைவரின் கூட்டு முயற்சியே வெற்றிக்கு காரணம். இந்திய விண்வெளி துறை பல்வேறு சாதனைகளை செய்து வருகிறது.

இதற்கு மக்கள் மற்றும் எல்லோருடைய ஆசீர்வாதமும் தான் காரணம். இஸ்ரோ திட்டங்களுக்கு பட்ஜெட்டில் அதிக நிதி ஒதுக்கியது வரவேற்கத்தக்கது; பாமர மக்கள் பயன்பெறும் திட்டங்களை இஸ்ரோ செய்து வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement