த.வெ.க., 2ம் ஆண்டு விழாவில் 5வது கட்ட மா.செ.,க்கள் பட்டியல் வெளியீடு

சென்னை: தமிழக வெற்றிக் கழகத்தின் 5வது கட்ட மாவட்ட செயலாளர்கள் பட்டியலை அக்கட்சியின் தலைமை இன்று வெளியிட்டுள்ளது.


தமிழக வெற்றிக் கழகத்தின் முதலாமாண்டு தொடக்க விழா நாளை (பிப்.,02) கொண்டாடப்பட உள்ளது. அதற்கு முன்னதாக, கட்சியில் உள்ள காலி பதவிக்கான நிர்வாகிகளை நியமிக்கும் பணியில் அக்கட்சியின் தலைவர் விஜய் ஈடுபட்டு வருகிறார். ஏற்கனவே, தலா 19 பெயர்கள் கொண்ட 3 கட்ட மாவட்ட செயலாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டு விட்டது. இந்த 3 கட்ட பட்டியலையும், கட்சி நிர்வாகிகளை சந்தித்தப் பிறகே விஜய் வெளியிட்டிருந்தார்.


த.வெ.க., 2ம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு பனையூர் அலுவலகத்தில், வேலுநாச்சியார், காமராஜர், ஈ.வெ.ரா., அம்பேத்கர், அஞ்சலையம்மாள் சிலைகளைச் சிறந்து வைத்து விஜய் மரியாதை செலுத்தினார். அவர் கட்சியை கொடியை ஏற்றி வைத்தார்.


இந்த நிலையில், த.வெ.க.,வின் 5ம் கட்ட மாவட்டச் செயலாளர்கள் பட்டியலை அக்கட்சியின் தலைவர் விஜய் வெளியிட்டார். அதன்படி, திருவள்ளூர், விழுப்புரம் உள்ளிட்ட 19 மாவட்டங்களுக்கான ஐந்தாம் கட்ட மாவட்ட செயலாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது அதோடு, 14 மாவட்ட பொறுப்பாளர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

Advertisement