தேர்தல்கள் முறையாக நடக்கிறதா: கண்காணிக்க குழு அமைத்தது காங்கிரஸ்

17

புதுடில்லி; தலைமை தேர்தல் ஆணையம், தேர்தல்களை ஒழுங்காக நடத்துகிறதா என்பதை கண்காணிக்க 8 பேர் கொண்ட குழுவை காங்கிரஸ் அமைத்துள்ளது. இந்த குழுவுக்கு EAGLE என்று பெயரிடப்பட்டு உள்ளது.



சட்டசபை மற்றும் பார்லி. தேர்தல்கள் ஓட்டுப்பதிவு மற்றும் ஓட்டு எண்ணிக்கையில் குளறுபடி செய்யப்படுவதாக காங்கிரஸ் தொடர்ந்து குற்றச்சாட்டு கூறி வருகிறது. தலைமை தேர்தல் ஆணையம் இந்த குற்றச்சாட்டுகளை மறுத்துவிட்டது.


இந் நிலையில் தலைமை தேர்தல் ஆணையம், அனைத்துத் தேர்தல்களையும் முறையாக, நேர்மையாக நடத்துகிறதா என்பதை கண்காணிக்க காங்கிரஸ் 8 பேர் கொண்ட குழுவை அமைத்து இருக்கிறது. இந்த குழுவுக்கு Empowered Action Group of Leaders and Experts (EAGLE) என்று பெயரிட்டு காங்கிரஸ் அதற்கான அறிவிப்பையும் வெளியிட்டுள்ளது.


அதன்படி, இக்குழுவில் அஜய் மக்கான், திக்விஜய் சிங், அபிஷேக் சிங்வி, பிரவீன் சக்ரவர்த்தி, பவன் கேரா, குர்தீப் சிங் சப்பல், நிதின் ராவத், சல்லா வம்சிசந்த் ரெட்டி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.


இந்த குழுவானது முதலில் மஹாராஷ்டிரா வாக்காளர் பட்டியல் குளறுபடிகள் பற்றி முழுமையாக ஆய்வு நடத்தி, அதன் அறிக்கையை கட்சி தலைமைக்கு சமர்ப்பிக்கும் என்று காங்கிரஸ் அறிவித்துள்ளது.

Advertisement