மதுரையில் போலீஸ்காரர் கொலை!

2

உசிலம்பட்டி: நாகையாபுரம் போலீஸ் ஸ்டேஷனில் பணியாற்றி வந்த போலீஸ்காரர் சிவா 32, பாப்பிநாயக்கன்பட்டி விசேச வீட்டுக்கு சென்று திரும்பும் போது கத்தியால் குத்தியதில் பலியானார். முதல் கட்ட விசாரணையில் உறவினர்களுக்குள் தகராறு காரணமாக உள்ளது என போலீசார் தெரிவித்தனர்.
போலீசார், உடலை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளனர். சம்பவ இடத்தில் இருந்த சிசிடிவி காட்சிகள் உள்ளிட்ட பிற சாட்சியங்களை கைப்பற்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

Advertisement