கிரிப்டோ கரன்சி மறுபரிசீலனையில் இந்தியா

புதுடில்லி:உலகளாவிய மாற்றங்கள் காரணமாக கிரிப்டோ கரன்சி மீதான நிலையை இந்தியா மறுபரிசீலனை செய்து வருவதாக பொருளாதார விவகார செயலர் அஜய் சேத் கூறினார்.


இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:


பிற நாடுகளில் கிரிப்டோ கரன்சி குறித்த அணுகுமுறைகள் மாறி வருவதையடுத்து, இந்தியா கிரிப்டோ குறித்த தன் நிலைப்பாட்டை மறுபரிசீலனை செய்து வருகிறது. நாட்டின் கடுமையான ஒழுங்குமுறை நிலைப்பாடு மற்றும் அதிக வர்த்தக வரிகள் இருந்தபோதிலும், சமீபத்திய
ஆண்டுகளில் இந்தியர்கள் கிரிப்டோ கரன்சியில் பணத்தை முதலீடு செய்து உள்ளனர்.


அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவியேற்ற பின், கிரிப்டோ குறித்த அறிவிப்புகளைத் தொடர்ந்து, இந்தியா கிரிப்டோ கரன்சி மீதான தன் நிலைபாட்டை மறுபரிசீலனை செய்து வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement