'பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்து ஆணை வெளியிட வேண்டும்'

கோவை : பள்ளிக் கல்வித்துறையில், 47ஆயிரம் தற்காலிக பணியிடங்களை நிரந்தரம் செய்து ஆணை வெளியிட்டு இருப்பதை போல, 12 ஆயிரம் பகுதிநேர ஆசிரியர்களையும் பணி நிரந்தரம் செய்து ஆணையிட வேண்டும் என, பகுதிநேர ஆசிரியர் சங்கம், தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளது.

இது குறித்து, பகுதிநேர ஆசிரியர் சங்கம் மாநில ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார் கூறியிருப்பதாவது:

தமிழத்தில், 14 ஆண்டுகளாக, 12 ஆயிரம் பகுதிநேர ஆசிரியர்கள் தற்காலிகமாக பணிபுரிந்து வருகின்றனர். இன்னும் நிரந்தரம் செய்யவில்லை.

பகுதிநேர ஆசிரியர்களை நிரந்தரம் செய்வதாக, தி.மு.க., தேர்தல் வாக்குறுதியில் கூறப்பட்டது. ஆட்சிக்கு வந்து நான்கு ஆண்டு முடியவுள்ளது. இன்னும் வாக்குறுதியை நிறைவேற்றவில்லை.

பள்ளிக்கல்வித்துறையில், 47ஆயிரம் தற்காலிக பணியிடங்களை நிரந்தரம் செய்து அரசாணை வெயிடப்பட்டுள்ளது.

ஏற்கனவே ஒதுக்கிய நிதியில் இருந்து, காலமுறை சம்பளத்தோடு தொடர் பணி நீட்டிப்புடன் பணிபுரிந்து வந்த பட்டதாரி, முதுகலை, தொழிற்கல்வி, கணினி ஆசிரியர்கள் உள்பட பணியாளர்கள் என, 47 ஆயிரம் பேர் இதனால் பலன் அடைந்து உள்ளனர்.

இந்நிலையில், 2011ம் ஆண்டு முதல் 12 ஆயிரத்து, 500 ரூபாய் தொகுப்பூதியத்தில் பணி செய்து வருகின்ற, 12 ஆயிரம் ஆசிரியர்கள் 14 ஆண்டுகளாக தற்காலிகமாக பணி செய்து வருகின்றனர். இவர்களையும் நிரந்தரம் செய்து ஆணையிட வேண்டும்.

இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.

தமிழத்தில், 14 ஆண்டுகளாக, 12 ஆயிரம் பகுதிநேர ஆசிரியர்கள் தற்காலிகமாக பணிபுரிந்து வருகின்றனர். இன்னும் நிரந்தரம் செய்யவில்லை. பகுதிநேர ஆசிரியர்களை நிரந்தரம் செய்வதாக, தி.மு.க., தேர்தல் வாக்குறுதியில் கூறப்பட்டது. ஆட்சிக்கு வந்து நான்கு ஆண்டு முடியவுள்ளது. இன்னும் வாக்குறுதியை நிறைவேற்றவில்லை.

Advertisement