கிராம நிர்வாக அலுவலர்கள் ஆலோசனை
பல்லடம் : திருப்பூர் மாவட்ட கிராம நிர்வாக அலுவலர்கள் ஆலோசனைக் கூட்டம், பல்லடத்தில் நடந்தது. மாவட்டத் தலைவர் பால் வாசகம் தலைமை வகித்தார். செயலாளர் பிரபு முன்னிலை வகித்தார்.
முன்னதாக, வேறு சங்கத்தை சேர்ந்த 20 நிர்வாகிகள், உறுப்பினர்கள் உள்ளிட்டோர், அச்சங்கத்திலிருந்து விலகி, தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் முன்னேற்ற சங்கத்தில் தங்களை இணைத்து கொண்டனர்.புதிதாக இணைந்த நிர்வாகிகள், உறுப்பினர்களுக்கு பொன்னாடை அணிவித்து வரவேற்பு தெரிவிக்கப்பட்டது.
தொடர்ந்து, சங்க செயல்பாடுகள், நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. முன்னாள் மாவட்ட தலைவர் குமார், முன்னாள் மாவட்ட செயலாளர் மோகன்தாஸ் ஆகியோர் விழாவை ஒருங்கிணைத்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement