தொழிலாளர் து.கமிஷனர் அலுவலகம் இட மாற்றம்
சென்னை:தொழிலாளர் நல கமிஷனரகம், நேற்று வெளியிட்ட அறிக்கை:
சென்னை குறளகம், மூன்றாவது தளத்தில் இயங்கி வரும் தொழிலாளர் துணை கமிஷனர், தொழிலாளர் உதவி கமிஷனர் அலுவலகங்கள், ராஜாஜி சாலையில் உள்ள வாவோ மேன்சன் 7வது தளத்திற்கு, நேற்று முதல் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளன. இனி வரும் காலங்களில், மேற்காணும் முகவரியில் தொடர்பு கொள்ளுமாறு, பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement