ஏர்லைன்ஸில் வேலை என கூறி ரூ. 1.73 லட்சம் மோசடி

புதுச்சேரி: ஏர்லைன்ஸில் வேலைக்கு பல்வேறு கட்டணங்கள் செலத்தவேண்டும் எனக் கூறி ஐ.டி., ஊழியரிடம் ரூ. 1.73 லட்சம் மோசடி செய்த சைபர் கிரைம் மோசடி கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.

புதுச்சேரி முத்தியால்பேட்டை, முத்து முதலியார் வீதியைச் சேர்ந்தவர் சிவனேஷ், 27; எம்.டெக். பட்டதாரி. தனியார் ஐ.டி., நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். அடுத்த நிலை வேலைக்கு ஆன்லைனில் வேலைவாய்ப்பு தேடும் இணையதள பக்கத்தில் பதிவிட்டு இருந்தார்.

கடந்த செப். 2ம் தேதி சிவனேசை தொடர்பு கொண்ட மர்ம நபர், தனியார் ஏர்லைன் நிறுவன மனித வள மேம்பாட்டு அதிகாரி என அறிமுகம் செய்து கொண்டார். ஏர்லைன் நிறுவனத்தில் வேலை உறுதி செய்துவிட்டதாகவும், செயலாக்க கட்டணம், பதிவு கட்டணம், தேர்வு கட்டணம் என பல்வேறு தவணையாக ரூ. 1.73 லட்சம் பணம் செலுத்தினார். தொடர்ந்து பல்வேறு காரணங்களை கூறி கட்டணம் செலுத்தவேண்டும் என கூறியதால் சந்தேகப்பட்டு விசாரித்தபோது சைபர் கிரைம் மோசடி கும்பல் என தெரியவந்தது.

புகாரின் பேரில் புதுச்சேரி சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement