பெண் ஊழியருக்கு பாலியல் தொல்லை

பல்கலை., செக்யூரிட்டி மீது வழக்கு

புதுச்சேரி: புதுச்சேரி பல்கலைக் கழகத்தில் சக பெண் ஊழியருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக, செக்யூரிட்டி மீது போலீசார் வழக்கு பதிந்தனர்.

புதுச்சேரி பல்கலை கழக வளாகத்தில், 35 வயது மதிக்க தக்க பெண் ஒருவர் கடந்த 3 ஆண்டுகளாக செக்யூரிட்டியாக வேலை செய்து வருகிறார். இவர், காலாப்பட்டு போலீசில் கொடுத்த புகாரில், தன்னுடன் வேலை செய்யும் செக்யூரிட்டி மோகன்ராஜ் என்பவர், அடிக்கடி பாலியல் தொல்லை கொடுத்து வந்தார். கடந்தாண்டு ஏப்., 5ம் தேதி என்னுடன் வேலை செய்யும் பெண் செக்யூரிட்டியை, அவர் தவறாக பேசி அழைத்தார்.

மற்றொரு பெண் செக்யூரிட்டியை ரோந்து வரும்போது, ஒருமையில் பேசினார். கடந்த மே மாதம், வீட்டிற்கு வா என என்னையும் தவறாக அழைத்தார் என்று, புகாரில் தெரிவித்துள்ளார். இந்த புகாரை பெற்ற காலாப்பட்டு போலீசார், மோகன்ராஜ் மீது வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement