நுாலகத்துறை போட்டி

விருதுநகர்: விருதுநகர் வே.வ.வன்னியப்பெருமாள் பெண்கள் கல்லுாரியில் நுாலகத்துறையின் வாசிக்க வாங்க 2024---25' என்ற தலைப்பில் மாநில அளவில் கல்லுாரிகளுக்கு இடையே 7 போட்டிகள் நடந்தது. இதில் 12 கல்லுாரிகளில் இருந்து 84 மாணவர்கள் கலந்து கொண்டனர்.

நுாலகத்துறை தலைவர் கிளாரா ஜெயசீலி வரவேற்றார்.

போட்டிகளில் வென்றவர்களுக்கு சிறப்பு விருந்தினர்கள் மாணிக்கவாசகம், மைதிலி மாணிக்கவாசகம், செயலாளர் மதன், கூட்டுச் செயலாளர் இனிமை, கல்லுாரி முதல்வர் சிந்தனா ஆகியோர் பரிசுகளை வழங்கினர்.

Advertisement