மளிகை கடையில் பணம், மொபைல் திருட்டு

சேலம்: இரும்பாலை அருகே மாரமங்கலத்துப்பட்டி, கங்கை நகரை சேர்ந்தவர் அப்துல் கனி, 42. இரும்பாலை, 3வது கேட் எதிரே மளிகை கடை நடத்துகிறார். கடந்த, 31 இரவு கடையை பூட்டிச்சென்றார். நேற்று முன்தினம் காலை, கடையை திறக்க வந்தபோது, பூட்டு உடைக்கப்பட்டிருந்தது.

உள்ளே சென்று பார்த்தபோது, கல்லா பெட்டியில் இருந்த, 4,000 ரூபாய், 2 மொபைல் போன்கள் திருடுபோனது தெரிந்தது. அவர் புகார்படி, இரும்பாலை போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement