சோள சாகுபடி வழிமுறை; விவசாயிகளுக்கு அறிவுரை

வீரபாண்டி: வீரபாண்டி வட்டார வேளாண் துறை உதவி இயக்குனர் கார்த்திகாயினி அறிக்கை: நடவு செய்துள்ள சோளத்தை அறுவடை செய்யும்போது நிலத்தில் இருந்து, 15 செ.மீ., தட்டையை விட்டு விட்டு அறுத்து, உடனே தண்ணீர் பாய்ச்ச வேண்டும். அறுவடை முடித்ததும், களை எடுக்க வேண்டும். அதற்கு பின், 15 மற்றும் 30 நாட்கள் இடைவெளியில் மீண்டும் களை எடுக்க வேண்டும்.

ஹெக்டேருக்கு, 100 கிலோ தழைச்சத்தை இரண்டாக பிரித்து, 50 கிலோ மணிச்சத்துடன், மறுதாம்பு பயிர் விட்ட, 15வது நாளில் இட வேண்டும். 45வது நாளில் மீதி, 50 கிலோ தழைச்சத்தை இட வேண்டும். மண் தன்மை, காலநிலை பொறுத்து, தேவையான அளவு நீர் பாய்ச்ச வேண்டும். 70 முதல், 80வது நாட்களுக்குள் நீர் பாய்ச்சுவதை நிறுத்தி விட வேண்டும்.

பூச்சி, நோய் பாதிப்பு காணப்பட்டால் உடனே ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு நடவடிக்கைககள் எடுக்க வேண்டும். மறுதாம்பு பயிரின் வயது, நடவு செய்த பயிரை விட, 15 நாட்கள் குறைவாக இருக்கும். அதற்கேற்ப அறுவடை செய்ய வேண்டும். இந்த வழிமுறைகளை விவசாயிகள் பின்பற்ற வேண்டும்.

Advertisement