'வரியை குறைத்தால் சினிமா தொழில் வளரும்'
சேலம்: 'திரவுபதி' பட இயக்குனர் மோகன் ஜி, சேலத்தில் நேற்று அளித்த பேட்டி: என் அடுத்த படம், மறைக்கப்பட்ட வரலாற்றை வெளிக்கொண்டு வரும்படி இருக்கும். சினிமா எடுப்பது எளிது. அதில் போட்ட முதலீட்டை எடுப்பது சிரமம். டிக்கெட் கட்டணம், 100 ரூபாயில், 30 ரூபாயை வரியாக செலுத்துகிறோம். படத்துக்கு ஒரு கோடி ரூபாய் வசூலானால் தயாரிப்பாளருக்கு, 40 லட்சம் ரூபாய் மட்டும் கிடைக்கிறது. இந்த வரியை குறைத்தால் தமிழகத்தில் சினிமா தொழில் வளரும்.
பெண்கள் படிக்கும் கல்லுாரியில், 'சிசிடிவி' கேமரா வைத்து கண்காணித்தால் குற்றங்கள் குறையும். அதற்கான நடவடிக்கையை, தமிழக அரசு எடுக்க வேண்டும். உலக அளவில், மோட்டார் பந்தயத்தில் நடிகர் அஜித், மூன்றாவதாக வெற்றி பெற்றுள்ளார். அவர் பத்மபூஷண் விருதுக்கு, இந்த வெற்றியும் ஒரு காரணம். விஜய் கட்சி தொடங்கி ஓராண்டு முடிந்துள்ளது. அவருக்கு ஏற்கனவே வாழ்த்து சொல்லிவிட்டேன். அவர் என்ன செய்யப்போகிறார் என்பதை காத்திருந்து பார்ப்போம்.
சீமான் ஆதாரத்தோடு பேசுவதாக கூறுவது, தேர்தல் அரசியல். ஈ.வெ.ரா., பேசியதில் கெட்டது, நல்லது என இரண்டும் உள்ளன. ஆனால், அவர் வந்த பிறகு தான் படித்தோம் என்பதெல்லாம் ஏற்க முடியாது. நான் தீவிர கடவுள் பக்தன். இவ்வாறு அவர் கூறினார்.