சாக்கடை குழிக்குள் சிக்கி மூன்று தொழிலாளர்கள் பலி
கோல்கட்டா; மேற்கு வங்கத்தின் கோல்கட்டா அடுத்துள்ள பந்தாலா பகுதியில் தோல் தொழிற்சாலை இயங்கி வருகிறது. இங்குள்ள 20 அடி சாக்கடை குழியில் அடைப்பு ஏற்பட்டது.
அவற்றை சரிசெய்ய அந்நிறுவனத்தில் பணியாற்றிய தொழிலாளி ஒருவர் ஈடுபட்டார். அக்குழிக்குள் இறங்கி அடைப்பை சரிசெய்ய முயன்றபோது, எதிர்பாராதவிதமாக சாக்கடை குழிக்குள் அவர் தவறி விழுந்தார்.
இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த மற்ற இரண்டு தொழிலாளர்கள், அவரை காப்பாற்ற குழிக்குள் இறங்கினர். அவர்களும் தவறி விழுந்தனர்.
தகவலறிந்து வந்த தீயணைப்பு துறையினர், நீண்டநேரம் போராடி உள்ளே சிக்கிய மூன்று தொழிலாளர்களின் உடல்களையும் மீட்டனர்.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ள நிலையில், சம்பவத்தின் போது தொழிலாளர்கள் முறையான உபகரணங்கள், பாதுகாப்பு உடைகள் அணிந்திருந்தனரா என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement