அனல்மின் நிலைய 3வது அலகில் 46 நாட்களாக உற்பத்தி பாதிப்பு

மேட்டூர்: மேட்டூர் பழைய அனல்மின் நிலையத்தில் ஒரு அலகில், 210 வீதம், 4 அலகு களில், 840 மெகாவாட் மின் உற்பத்தி செய்யலாம். அங்கு கடந்த டிச., 19ல், 3வது அலகில் ஏற்பட்ட விபத்தில், 2 பேர் உயிரிழந்தனர். ஆனால் இதுவரை சீரமைப்பு பணி தொடங்கப்படவில்லை. அங்கு யாரும் நுழைய வேண்டாம் என எச்சரிக்கை பலகை வைக்கப்பட்டுள்ளது. இதர அலகுகளில் மட்டும் மின் உற்பத்தி நடக்கிறது.


கோடை நெருங்குவதால் வரும் நாட்களில் மின்நுகர்வு அதிகரிக்க வாய்ப்புள்ளது. 2024 மே, 2ல் தமிழக மின்நுகர்வு அதிகபட்சம், 20,830 மெகாவாட் ஆக உயர்ந்தது. வரும் நாட்களில் மின்நுகர்வு படிப்படியாக அதிகரிக்கும். இந்நிலையிலும், 3வது அலகில் சீரமைப்பு தொடங்கப்படாததால், 46 நாட்களாக, 210 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.

Advertisement