பள்ளி வளாகத்தைசுற்றி கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த திட்டம்

மானாமதுரை அருகே பெரியகோட்டை அரசு மேல்நிலை பள்ளியில் சுற்று வட்டார கிராமப் பகுதிகளை சேர்ந்த 190க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். 18க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர். பள்ளி வளாகத்தில் ஆசிரியர், ஆசிரியைகளுக்கு தனித்தனியாக அறைகள் உள்ள நிலையில், ஜன., 27 அன்று ஆசிரியர்கள் அறையை சூறையாடிய சிலர் டேபிளிலும், அறையின் கீழ் பகுதிகளிலும் மலம் கழித்து விட்டு சென்றுள்ளனர்.

பள்ளியின் வளர்ச்சியை பிடிக்காத சிலர் இதுபோன்ற ஒழுக்கக்கேடான செயல்களில் ஈடுபட்டு வருவதாக ஆசிரியர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

இதுகுறித்து தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது. சிப்காட் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

இது குறித்து சிவகங்கை முதன்மை கல்வி அலுவலர் பாலுமுத்து கூறியதாவது, இப்பள்ளியில் நடந்த சம்பவம் குறித்து விசாரித்து வருகிறோம்.

முதற்கட்டமாக பள்ளி வளாகத்தைசுற்றி கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த நடவடிக்கை எடுத்து வருகிறோம், என்றார்.

Advertisement