பழ வியாபாரியிடம் 9 சவரன் தாலி செயின் பறிப்பு
புதுச்சேரி: பைக்கில் அமர்த்திருந்த பழ வியாபாரியிடம் 9 சவரன் தாலி செயினை பறித்துச் சென்ற மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
பெரியகாலாப்பட்டு முருகன் கோவில் தெருவை சேர்ந்தவர் ஏழுமலை. இவரது மனைவி விஜயகுமாரி, 57; இவர் மாத்துார் இ.சி.ஆரில் பழம் வியாபாரம் செய்து வருகின்றனர். இவர்கள் கடந்த 31ம் தேதி இரவு 10.00 மணியளவில் கடையை மூடிவிட்டு கணவரோடு வீட்டிற்கு செல்ல பைக்கில் அமர்ந்து புறப்பட தயரானார்.
அப்போது இவரது பின்னால் வந்த மர்ம நபர் ஒருவர் விஜயகுமாரி கழுத்தில் அணிந்திருந்த 15 பவுன் தாலி செயினை பறித்துக்கொண்டு தப்பியோடினார்.
அப்போது தாலி செயினில் இருந்த மாங்கல்யம், காசு உள்ளிட்டவை அறுந்து கீழே விழுந்தது. 9 சவரன் செயினை மட்டும் மர்ம நபர் பறித்துகொண்டு தப்பினார்.
இதில் காயமடைந்த விஜயக்குமாரியை உடனே கலாப்பட்டு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்தனர்.
சிகிச்சைக்கு பின் நேற்று விஜயகுமாரி கொடுத்த புகாரின் பேரில் காலாப்பட்டு சப்-இன்ஸ்பெக்டர் முருகன் வழக்குப் பதிந்து தாலி செயினை பறித்துச்சென்ற மர்ம நபரை தேடி வருகின்றனர்.