நங்காஞ்சி ஆற்றில் ஆண் சடலம் மீட்பு

அரவக்குறிச்சி: அரவக்குறிச்சி அருகே, நங்காஞ்சி ஆறு உள்-ளது. இந்த ஆற்றில் ஆண் சடலம் கிடப்பதாக, அங்கு மீன்பிடிக்க சென்றவர்கள், போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து, எஸ்.ஐ., ராஜா, சேர்வை தீயணைப்பு நிலைய சிறப்பு அலு-வலர் ராதாகிருஷ்ணன் தலைமையிலான வீரர்கள், சம்பவ இடத்துக்கு சென்று சடலத்தை மீட்டனர்.



விசாரணையில், இறந்தவர் திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரத்தை சேர்ந்த ரங்கசாமி மகன் வெங்கடேசன், 40, என்பதும்; மதுவுக்கு அடி-மையானதால், மனைவி, மகன் இவரை பிரிந்து வாழ்ந்து வருவதும் தெரியவந்தது. கடந்த, 29ல் பெரியப்பா மகன் சுப்பிரமணியின் இறுதி சடங்-கிற்கு வெங்கடேசன் வந்துள்ளதும், பின், அதிக-மாக மது குடித்ததால் ஆற்றில் விழுந்து இறந்-ததும் தெரியவந்தது. அரவக்குறிச்சி போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement