என்.ஆர்.காங்., பொறுப்பாளர் பதவிக்கு விண்ணப்பிக்கலாம்
புதுச்சேரி: என்.ஆர்.காங்., மேற்கு மாவட்ட பொறுப்பாளர் பதவிகளுக்கு என்.ஆர்.காங்., உறுப்பினர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
இதுகுறித்து மேற்கு மாவட்ட என்.ஆர்.காங்., தலைவர் பாலமுருகன் விடுத்துள்ள அறிக்கை:
என்.ஆர்.காங்., நிறுவனத் தலைவர் முதல்வர் ரங்கசாமி ஒப்புதலோடு, என்.ஆர்.காங்., மேற்கு மாவட்ட கமிட்டி தலைவர் 2, பொதுச் செயலாளர் 1, செயலாளர் 2, இணை செயலாளர் 3, பொருளாளர் 1, செயற்குழு உறுப்பினர்கள் 20 நேர் நியமிக்கப்பட உள்ளனர். இதற்காக மண்ணாடிப்பட்டு, திருபுவனை, ஊசுடு, வில்லியனுார், மங்கலம் ஆகிய மேற்கு மாவட்டத்திற்குட்பட்ட கட்சி உறுப்பினர்கள் தங்களது விருப்ப மனுவை மேற்கு மாவட்ட அலுவலகத்தில் அளிக்கும் படி கேட்டுக் கொள்ளப்படுகிறது.
மேலும் விண்ணப்பத்துடன், ஆதார், உணவு பங்கீட்டு அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, இரண்டு பாஸ்போர்ட் அளவு புகைப்படம் இணைத்து வழங்கவேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.