மத்திய அமைச்சருக்கு பத்மஸ்ரீ கலைஞர் நன்றி

புதுச்சேரி: பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்ட புதுச்சேரி தவில் இசை கலைஞர் தட்சிணாமூர்த்தி மத்திய அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வாலை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தார்.

புதுச்சேரி தவில் கலைஞர் தட்சிணாமூர்த்திக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது. அவருக்கு கவர்னர் கைலாஷ்நாதன் உள்பட பலரும் வாழ்த்து தெரிவித்தனர். அதை தொடர்ந்து பா.ஜ., தேசிய பட்டியல் அணியின் செயற்குழு உறுப்பினர் தமிழ்மாறன் தலைமையில் பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்ட தட்சிணாமூர்த்தி, பா.ஜ., நிர்வாகிகள் மத்திய அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வாலை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தனர்.

மேலும், புதுச்சேரியில் இசை துறையில் முதல் முறையாக பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ள தட்சிணாமூர்த்திக்கு பாராட்டு விழா நடக்க உள்ளது.

அந்த விழாவில் பங்கேற்க வேண்டும் என அழைப்பு விடுத்தனர். இதனை ஏற்ற மத்திய சட்டத்துறை அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் பாராட்டு விழாவில் நிச்சயம் கலந்து கொள்வதாக உறுதியளித்தார்.

Advertisement