மாநில அளவிலான கேரம்போட்டி பரிசளிப்பு விழா
புதுச்சேரி: மாநில அளவிலான கேரம்போட்டியில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு முதல்வர் ரங்கசாமி கேடயம் வழங்கினார்.
புதுச்சேரி கேரம் அகாடமி சார்பில் புதுச்சேரி முதலமைச்சர் கோப்பைக்கான 17வது மாநில அளவிலான கேரம் போட்டி உப்பளம் ராஜீவ்காந்தி உள்விளையாட்டு அரங்கில் கடந்த 31-ந் தேதி தொடங்கியது. இதில் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு தனித்தனியாக போட்டிகள் நடத்தப்பட்டன.
இதில் பவானிஷா, சுபிஷ்னா, சுபர்ணா, சஞ்சனா, நிரஞ்சனா, சுருதிவன், மர்வான், விக்னேஷ், பாலாஜி ஆகியோர் பல்வேறு பிரிவுகளில் முதலிடம் பிடித்தனர்.
போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை முதல்வர் ரங்கசாமி வழங்கினார்.
விழாவில் புதுச்சேரி மாநில விளையாட்டு வீரர்கள் நல சங்க தலைவர் வளவன், புதுச்சேரி கேரம் அகாடமி சேர்மன் தண்டபாணி, துணைத்தலைவர் கோகுல்ராஜா, தலைவர் சின்னதம்பி மற்றும் பெற்றோர் மாணவ, -மாணவிகள் கலந்து கொண்டனர்.