வீட்டு சிலிண்டர் விதிமீறல்: கேட்டரிங் உரிமையாளர் மீது வழக்கு
புதுச்சேரி: வீட்டு உபயோக சிலிண்டரை விதிமீறி பயன்படுத்திய கேட்டரிங் உரிமையாளர் மீது போலீசார் வழக்கு பதிந்தனர்.
முதலியார்பேட்டை பகுதியில் உள்ள தனியார் கேட்டரிங் சர்வீஸ் சென்டரில், வீட்டு உபயோக சிலிண்டர் பயன்படுத்தி, உணவு தயாரித்து விற்பனை செய்வதாக புகார் எழுந்தது. புதுச்சேரி உணவு கடத்தல் தடுப்புபிரிவு போலீசார், நேற்று முன்தினம் நேரில் நடத்திய சோதனையில், அந்த கேட்டரிங் சர்வீஸ் நிறுவனம், விதிமீறி வீட்டு உபயோக சிலிண்டர்களை பயன்படுத்தி உணவு மற்றும் பேக்கரி பொருட்கள் தயாரித்து வருவது தெரியவந்தது.
இது தொடர்பாக, கேட்டரிங் உரிமையாளர் கந்தன், 55; மீது உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் வழக்கு பதிந்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement