ஆக்கிரமிப்பாளர்கள் மீது போலீஸ் வழக்கு

புதுச்சேரி: புதுச்சேரியில் சாலையை ஆக்கிரமித்திருந்த கடைகளை போக்குவரத்து போலீசார் அகற்றினர்.

புதுச்சேரியில், முக்கிய சாலைகளில் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள சாலையோர ஆக்கிரமிப்புகளை போக்குவரத்து போலீசார் அகற்றி வருகிறார்கள். அதன் ஒருபகுதியாக அஜந்தா சிக்னல் சந்திப்பு முதல் முத்தி யால்பேட்டை ஏழை மாரியம்மன் கோவில் வரை இருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி நேற்று நடந்தது.

போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகராஜன் தலைமையிலான போலீசார் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.

அப்போது, அந்த பகுதி யில் சாலையை ஆக்கிரமித்து கடைகள் அமைத்திருந்ததாக 4 கடைக்காரர்கள் மீது போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

Advertisement