ரோலர் ஸ்கேட்டிங் விழிப்புணர்வு ஊர்வலம் 

புதுச்சேரி: புதுச்சேரி கலாம் ரோலர் ஸ்கேட்டிங் சங்கம் சார்பில், சாலை பாதுகாப்பு மற்றும் ஹெல்மெட் அவசியம் குறித்து, ரோலர் ஸ்கேட்டிங் விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.

புதுச்சேரி இந்திராகாந்தி சிலை சந்திப்பில் நடந்த நிகழ்ச்சிக்கு சங்க செயலாளர் காமேஷ்வரன் தலைமை தாங்கினார். தலைவர் வெங்கடேசன் முன்னிலை வகித்தார். ஸ்கேட்டிங் ஊர்வலத்தை துணை சபாநாயகர் ராஜவேலு கொடிசைத்து துவக்கி வைத்தார்.

ஊர்வலத்தில் ஸ்கேட்டிங் மாணவர்கள் 50க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்து, பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி சென்றனர். இந்திரா சிலை அருகே துவங்கிய விழிப்புணர்வு ஊர்வலம், புதிய பஸ் நிலையம், புஸ்சி வீதி வழியாக கடற்கரை சாலை காந்தி சிலையில் முடிவடைந்தது. ஊர் வலத்தில் பங்கேற்ற அனைவருக்கும் பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டன.

Advertisement