இந்திரா நகர் தொகுதியில் நீர்த்தேக்க தொட்டி திறப்பு
புதுச்சேரி: இந்திரா நகர் தொகுதியில், 12.40 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதியதாக கட்டப்பட்ட, மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை, முதல்வர் ரங்கசாமி திறந்து வைத்தார்.
புதுச்சேரி இந்திரா நகர் தொகுதிக்குட்பட்ட முத்திரையர்பாளையம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் குடிநீர் சரிவர கிடைக்காமல் மக்கள் மிகவும் அவதிப்பட்டனர்.
இதுகுறித்து, தொகுதி எம்.எல்.ஏ.,விடம் கோரிக்கை வைக்கப்பட்டது. அதையடுத்து, பொதுப் பணித்துறை மூலம் ரூ.12.40 கோடி மதிப்பீல், 10 லட்சம் லிட்டர் கொள்ளவு கொண்ட புதிய மேல்நிலை நீர்தேக்க தொட்டி கட்டி முடிக்கப்பட்டது.
நீர்தேக்க தொட்டியை முதல்வர் ரங்கசாமி நேற்று திறந்து வைத்தார். அமைச்சர் லட்சுமிநாராயணன், அரசு கொறடா ஆறுமுகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நிகழ்ச்சியில், அரசு செயலர் ஜெயந்த குமார் ரே, பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் தீனதயாளன், கண்காணிப்பு பொறியாளர் பாலசுப்பிரமணியன், செயற்பொறியாளர் உமாபதி, உதவி பொறியாளர் ஸ்ரீதரன், இளநிலைப் பொறியாளர் பாலு உட்பட என்.ஆர்., காங்., பிரமுகர்கள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.