பட்ஜெட்டில் புதுச்சேரிக்கு ரூ. 3,432 கோடி ஒதுக்கீடு
புதுச்சேரி: மத்திய பட்ஜெட்டில் புதுச்சேரிக்கு 3,432 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
புதுச்சேரி யூனியன் பிரதேசமாக உள்ளதால் பல்வேறு மத்திய அரசு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றது. இதற்கான நிதியை மத்திய அரசு தருகின்றது. அத்துடன் புதுச்சேரிக்கு ஒதுக்கப்படும் நிதியும் மத்திய பட்ஜெட்டில் சேர்த்தே சமர்பிக்கப்படுகின்றது. அதன்படி மத்திய பட்ஜெட்டில் புதுச்சேரிக்கு 3,432 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து அமைச்சர் லட்சுமிநாராயணன் கூறும் போது, கடந்தாண்டு புதுச்சேரிக்கு 3,269 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. தற்போது மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்துள்ள 2024-25 நிதியாண்டு மத்திய பட்ஜெட்டில் 3,432 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளது. இதில் பேரிடர் நிதியாக 66 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. கடந்தாண்டை ஒப்பிடும்போது 163 கோடி ரூபாய் கூடுதல் என்றார்.