விருதுகள் வழங்கும் விழா 

புதுச்சேரி: புதுச்சேரி கலாம் விதைகளின் விருட்சம் சமூக இயக்கம் சார்பில், சிறந்த இணையர், மானுடம் போற்றும் மாமனிதர்கள் ஆகிய விருதுகள் வழங்கும் விழா நடந்தது.

தமிழ்ச்சங்க வளாகத்தில் நடந்த விழாவிற்கு, தமிழ்ச் சங்கத் தலைவர் முத்து, கிருஷ்ணவேணி முத்து தலைமை தாங்கினர். பரமேஸ்வரி வரவேற்றார். அறம் அறக்கட்டளை நிர்வாகி மனோகரன் வாழ்த்தி பேசினார்.

விழாவில், ஓய்வு பெற்ற எஸ்.பி., சண்முகசுந்தரம்-பத்மாவதி, நடேசன்- நீலா, ஜானகிராமன்-ஜோதிலட்சுமி, கலைவரதன்- காஞ்சனா, அசோக்குமார்-ஹேமலதா, செல்வமணி- பியுலா வெண்ணிலா, குமார்-லதா, பிலிப்குமார் டோமினிக்- கலைவாணி ஆகியோருக்கு ஆகச் சிறந்த அன்பின் இணையர் விருதுகளும், புதுச்சேரி முப்படை முன்னாள் ராணுவ வீரர்கள் நலச்சங்க நிறுவனர் மோகன், இளங்கோவன், வாசுகி ராமமூர்த்தி, பிரான்சிஸ் பேட்ரிக் கேலரி, பிரேம்குமார் ஆகியோருக்கு, மானுடம் போற்றும் மாமனிதர் என்ற விருதுகளும் வழங்கப்பட்டன.

விழாவை தாகூர் அரசு கல்லுாரி உதவி பேராசிரியர் ரேகா தொகுத்து வழங்கினார். கலாம் விதைகளின் விருட்சம் சமூக இயக்க நிறுவனர் ராஜா நன்றி கூறினார்.

Advertisement