பொது இடத்தில் ரகளை இருவர் கைது

அரியாங்குப்பம்: மது போதையில், பொது இடத்தில் ரகளையில் ஈடு பட்ட இருவரை போலீசார் கைது செய்தனர்.

அரியாங்குப்பம் அடுத்த சின்னவீராம்பட்டினம் சாலையில், நேற்று இரண்டு வாலிபர்கள், மது போதையில் அவ்வழியாக செல்லும் பொதுமக்களிடம் தகராறு செய்ததை அறிந்த அரியாங்குப்பம் சப் இன்ஸ்பெக்டர் கதிரேசன் மற்றும் போலீசார் இருவரையும் பிடித்து விசாரித்தனர்.

இதில் அவர்கள், திருச்சி அம்பேத்கர் தெருவை சேர்ந்த நாகேந்திரன், 20, தீபக், 19; என்றும், இவர்கள், புதுச்சேரியில் தங்கி தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருவதும், போதையில் தகராறு செய்ததும் தெரிய வந்தது.

அரியாங்குப்பம் போலீசார் இரண்டு பேர் மீதும் வழக்குப் பதிந்து, அவர்களை கைது செய்தனர்.

Advertisement