சிவசடையப்பர் கோவிலில் இன்று கும்பாபிேஷகம்

புதுச்சேரி: பேட்டையான் சத்திரம், சிவசடையப்பர் கோவிலில், இன்று கும்பாபிேஷகம் நடக்கிறது.

புதுச்சேரி பேட்டையான் சத்திரம் சிவசடையப்பர் கோவிலில், கும்பாபிேஷகத்தையொட்டி, கடந்த 29ம் தேதி, கணபதி பூஜையுடன் நிகழ்ச்சி துவங்கியது. அதனை தொடர்ந்து, 30ம் தேதி, சிறப்பு ேஹாமம், 31ம் தேதி, சோடச மகாலட்சுமி தீப பூஜையும், நேற்று முன்தினம் முதற்கால யாகசாலை நேற்று இரண்டாம் கால யாகசாலை மற்றும் மூன்றாம் கால யாகசாலை பூஜை நடந்தது.

இன்று காலை 6:30 மணிக்கு, நான்காம் காலயாகசாலை பூஜையும், முக்கிய நிகழ்வான, காலை 9:00 மணி முதல் 10:30 மணிக்குள் விமானத்தில் புனிதநீர் ஊற்றி, மகா கும்பாேஷகம் நடக்கிறது. தொடர்ந்து, பரிவார சாமிகளுக்கு கும்பாபி ேஷகம் நடக்கிறது.

Advertisement