சீரமைக்கப்பட்ட சாலை திறப்பு கிராம மக்களுக்கு பெரும் பயன்

கோத்தகிரி : கோத்தகிரி ஜக்கனாரை பகுதியில், 9 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட சாலை திறக்கப்பட்டது.

கோத்தகிரி ஊராட்சி ஒன்றியம், அரவேணு பஜாரில் இருந்து, அரபெட்டு கிராமத்திற்கு செல்லும், அரை கி.மீ., சாலை மிக மோசமாக சேதமடைந்து காணப்பட்டது. 'அப்பகுதி மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டு சாலையை சீரமைக்க வேண்டும்,' என, தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.

மேலும், அப்போதைய, எம்.எல்.ஏ.,வுக்கு கோரிக்கு மனு அளித்தனர். அதன்படி, சாலையை சீரமைக்க, சட்டமன்ற தொகுதி நிதியில், 9 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு, பணி நிறைவடைந்தது.

இச்சாலை சீரமைக்கப்பட்டதால், அப்பகுதியில் வசிக்கும், நுாற்றுக்கணக்கான மக்களுக்கு பயனுள்ளதாக அமைந்துள்ளது. சாலை அமைக்கும் பணி நிறைவடைந்த நிலையில், முன்னாள் எம்.எல்.ஏ., சாந்தி ராமு, சாலையை மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார். நிகழ்ச்சியில், கவுன் சிலர் மனோகரன், சுரேஷ் மற்றும் மகேந்திரன், நடேசன் உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement