காரில் ரூ.2.72 லட்சம் மதிப்பு குட்கா, மது கடத்தியவர் கைது
ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் சிப்காட் ஸ்டேஷன் எஸ்.ஐ., அன்பழகன் மற்றும் போலீசார், ஓசூர் சிப்காட் ஜங்ஷன் பகுதியில் வாகன சோதனை மேற்கொண்டனர். அவ்வழியாக வந்த ரெனால்ட் காரை நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது, 2.69 லட்சம் ரூபாய் மதிப்புள்ள, 423 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் மற்றும் 3,120 ரூபாய் மதிப்புள்ள, 48 பாக்கெட் கர்நாடகா மதுபானம் இருந்தது.
காரை ஓட்டி வந்த, சேலம் மாவட்டம், ஆத்துார் அருகே கிழக்கு காட்டுக்கோட்டையை சேர்ந்த விஜயகுமார், 27, என்பவரை பிடித்து விசாரித்தபோது, அவற்றை கர்நாடகா மாநிலம், பெங்களூருவில் இருந்து கும்ப கோணத்திற்கு கடத்தி செல்வது தெரிந்தது. அவரை கைது செய்த போலீசார், புகையிலை பொருட்கள், மதுபானம் மற்றும் 3 லட்சம் ரூபாய் மதிப்புள்ள கார் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement