கரூர் அருகே முட்புதருக்குள் குடிநீர் மேல் நிலை தொட்டி
கரூர்: கரூர் பஞ்சாயத்து யூனியன், காதப்பாறை கிராம பஞ்சாயத்து, வெண்ணைமலையில், 300 க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. ஆயிரக்கணக்-கானோர் வசித்து வருகின்றனர். அவர்கள் பயன்-பாட்டுக்காக, சில ஆண்டுகளுக்கு முன், குடிநீர் மேல்நிலை தொட்டி கட்டப்பட்டது.
அதன் மூலம், வெண்ணைமலை பகுதியில் உள்ள, வீடுகளுக்கு குடிநீர் சப்ளை செய்யப்படுகி-றது. இந்நிலையில், மேல்நிலை குடிநீர் தொட்-டியை சுற்றி முட்புதர்கள் முளைத்துள்ளது. குறிப்-பாக, சுவர்களும் சேதம் அடைந்துள்ளது. மேல்-நிலை குடிநீர் தொட்டியில், பராமரிப்பு பணிக்காக மேலே ஏறி செல்ல முடியாமல், பணியாளர்கள் சிரமப்படுகின்றனர்.
மேல்நிலை குடிநீர் தொட்டியை, சீரமைக்க வேண்டும் என, அந்த பகுதியினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர். மேல்நிலை குடிநீர் தொட்டியை சீரமைக்க, காதப்பாறை பஞ்சாயத்து நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement