அரிகாரன்பாளையம் ரயில்வே பாலத்தில் சாலை சேதத்தால் வாகன ஓட்டிகள் அவதி


கரூர்: கரூர்-ஈரோடு ரயில்வே வழித்தடத்தில் அரிகா-ரன்பாளையத்தில், கரூர்- சேலம் தேசிய நெடுஞ்-சாலையில், ரயில்வே பாலம் கட்டப்பட்டுள்ளது. அதில், பல இடங்களில் சாலை குண்டும், குழியு-மாக உள்ளது. சமீபத்தில் சாலை சேதம் அடைந்த பகுதிகளில், ஜல்லிக்கற்கள், சிமென்ட் கலவை போடப்பட்டது.


அதை ஊழியர்கள், சரியாக போடாததால் மேடு, பள்ளமாக உள்ளது. இதனால், இரவு நேரத்தில் கார், இருசக்கர வாகனங்களில் செல்வோர் தடு-மாறி கீழே விழுகின்றனர். குறிப்பாக, அந்த ரயில்வே பாலத்தில் மின் விளக்கு வசதியும் இல்-லாததால், சாலை மேடு, பள்ளமாக இருப்பது தெரிவது இல்லை. இதனால், நாள்தோறும் விபத்து நடக்கிறது.
எனவே, அரிகாரன்பாளையம் ரயில்வே பாலத்தின் குண்டும், குழியுமாக உள்ள சாலையை சரி செய்து, மேடு, பள்ளமாக உள்ள சிமென்ட் கலவையை சரி செய்ய வேண்டும் என, வாகன ஓட்டிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Advertisement