சிறு தொழில்களுக்கு அதிகளவில் கடன் உதவி தொழில் வணிகத்துறை ஆணையர் வேண்-டுகோள்

கரூர்: 'குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு அதிகளவில் கடன் வழங்க வங்கியாளர்கள் முன்-வரவேண்டும்' என, சென்னை தொழில் வணிகத்-துறை ஆணையர் நிர்மல்ராஜ் தெரிவித்தார்.


கரூர் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்க-ளுக்கு வங்கிகள் கடன் வழங்குவது தொடர்பாக வங்கியாளர்களுக்கான ஆய்வு கூட்டம் நடந்தது. சென்னை தொழில் வணிக துறை ஆணையர் நிர்-மல்ராஜ் தலைமை வகித்து பேசியதாவது: கரூர் மாவட்டத்தில் பல்வேறு வங்கிகள் தொழில் நிறு-வனங்களுக்கு சிறப்பாக கடன் உதவி வழங்கி சேவையாற்றி வருகிறது. சில தனியார் வங்கிகள் கடன் கொடுப்பதற்கு பல்வேறு விதிமுறைகளை விதித்து, அதில் தாமதம் ஏற்பட்டு வருகிறது. அதனால் வங்கிகளுக்கு பல்வேறு ஆலோச-னைகள் வழங்கப்பட்டுள்ளது.


குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு அதிகளவில் கடனுதவியை வழங்க வங்கியா-ளர்கள் முன்வரவேண்டும். மேலும் கலைஞர் கைவினை திட்டத்தில், 3 லட்சம் ரூபாய் வரை பிணையற்ற கடன் உதவி வழங்குதல், 50 ஆயிரம் வரை மானியம் வழங்குதல், 5 சதவீதம் வரை வட்டி மானியம் வழங்குதல் திட்டங்களை செயல்படுத்த வேண்டும்.
இவ்வாறு பேசினார்.


கூட்டத்தில், கலெக்டர் தங்கவேல், இந்தியன் ஓவர்சீஸ் வங்கி துணை பொது மேலாளர் மாரி செல்வம், நபார்டு வங்கி மேலாளர் மோகன் கார்த்திக், மாவட்ட முன்னோடி வங்கி அலுவலர் வசந்தகுமார், மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் ரமேஷ், வேளாண்துறை இணை இயக்-குனர் சிவானந்தம் உள்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement