பா.ஜ., கரூர் மாவட்ட தலைவருக்கு எதிராக போஸ்டர் நடவடிக்கை எடுக்காவிட்டால் கட்சி வளர்ச்-சிக்கு சிக்கல்
கரூர்: பா.ஜ., கரூர் மாவட்ட தலைவர் தேர்தலில் வெற்றி பெற்ற செந்தில்நாதனுக்கு எதிராக போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. இது கட்சி வளர்ச்சியை பாதிக்கும் என்பதால், போஸ்டர் ஒட்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பா.ஜ., நிர்வாகிகள் வேண்-டுகோள் விடுத்துள்ளனர்.
கரூரில் உள்ள, பா.ஜ., மாவட்ட அலுவல-கத்தில், மாவட்ட தலைவர் தேர்தல், ஜன. 5 ல் நடந்தது. அப்போது உட்கட்சி பிரச்னை காரண-மாக தேர்தல் நிறுத்திவைக்கப்பட்டது. மீண்டும், கரூர் பா.ஜ., மாவட்ட அலுவலகத்தில், மாவட்ட தலைவருக்கான தேர்தல் கடந்த, 21ல் நடந்தது. இதில், 15 பேர் மாவட்ட தலைவர் பதவிக்கு போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்தனர்.
மாவட்ட தலைவர் தேர்தலில் வாக்களிக்க, 61 பேர் தகுதி பெற்று இருந்தனர். அதில், 59 பேர் வாக்களித்தனர். இதன் அடிப்படையில், மாவட்ட தலைவர் செந்தில்நாதன், மாநில மகளிர் அணி துணைத் தலைவர் மீனா, மாவட்ட செயலாளர் பிரபு ஆகியோர் வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர். பின், 25ல் புதிய தலைவராக செந்தில்-நாதன் மீண்டும் தேர்வு செய்யப்பட்டதாக, மாநில துணைத்தலைவர் ராமலிங்கம் அறிவித்தார். இந்நிலையில் செந்தில்நாதனுக்கு எதிராக, கரூரில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது பரப-ரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இது குறித்து பா.ஜ., நிர்வாகிகள் கூறியதாவது: கரூர் மாவட்டத்தில் மாநில தலைவர் அண்ணா-மலை வருகைக்கு முன் வரை, பா.ஜ., கட்சி வளர்ச்சி பெறாமல் இருந்தது. 2014 லோக்ச-பாவில், பா.ஜ., கூட்டணியில், தே.மு.தி.க., போட்டியிட்ட போது, 6.3 சதவீதம் ஓட்டுக்களை பெற்றது. கடந்த, 2016ல் சட்டசபை தேர்தலில், கரூரில், பா.ஜ., முன்னாள் மாவட்ட தலைவர் சிவசாமி, அரவக்குறிச்சியில் பிரபு ஆகியோர் போட்டியிட்டு, 2 சதவீதம் ஓட்டுகளை கூட பெற முடியவில்லை. அந்தளவு மோசமான நிலையில் இருந்த கட்சி, தற்போதைய மாவட்ட தலைவர் செந்தில்நாதன், 2024 லோக்சபா தேர்தலில், 9.05 ஓட்டுக்களை பெற்றார்.
தலைமை வழிகாட்டுதல் படி, 59 நிர்வாகிகள் ஓட்டு போட்டதில், 51 ஓட்டுகளுடன் மாவட்ட தலைவர் தேர்தலில் செந்தில்நாதன் வெற்றி பெற்றுள்ளார். இந்நிலையில், 'மாநிலமே மறுபரி-சீலனை செய்; கரூர் மாவட்ட தலைவரை மாற்றம் செய்' பா.ஜ., உண்மை தொண்டர்கள் கரூர் மாவட்டம்' என்ற பெயரில் போஸ்டர்களை ஒட்டி உள்ளனர்.
மாநில தலைவர் அண்ணாமலையின் சொந்த மாவட்டத்தில் சிக்கலை ஏற்படுத்தும் வகையில் சிலர் செயல்பட்டு வருகின்றனர். அவர்கள் மீது மாநில தலைமை நடவடிக்கை எடுக்க-ாவிட்டால், கோஷ்டி பூசலால் கட்சி வளர்ச்சி பெரிதும் பாதிக்கப்படும்.
இவ்வாறு கூறினர்.