மாவட்ட அளவில் பேச்சு போட்டி: மாணவ, மாணவியருக்கு பரிசு


கரூர்: தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கு நடந்த பேச்சு போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு நிகழ்ச்சி நடந்தது. கலெக்டர் தங்கவேல் தலைமைவ-கித்தார். கடந்த, 21, 22 ல் நடந்த கவிதை, கட்-டுரை, பேச்சு போட்டியில் பள்ளி, மாணவ, மாண-வியர் பங்கேற்றனர்.


வெற்றி பெற்றவர்களுக்கு முதல் பரிசு, 10,000 ரூபாய், இரண்டாம் பரிசு, 7,000, மூன்றாம் பரிசு, 5,000 என, 6 போட்டிக-ளுக்கு, 1.32 லட்சம் ரூபாய் காசோலை மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கினார்.


தமிழ் வளர்ச்சி உதவி இயக்குனர் ஜோதி, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சுகா-னந்தம்
உள்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement