அங்காளம்மன் கோவில் கும்பாபிஷேக விழா

ராசிபுரம்: ராசிபுரம் அடுத்த கவுண்டம்பாளையம் அருகே, அங்காளம்மன் கோவில் புதிதாக கட்டப்பட்டுள்-ளது. இதன் கும்பாபிஷேக விழா, நேற்று காலை நடந்தது. கடந்த, 31ல் அப்பகுதியை சேர்ந்த பெண்கள், 100க்கும் மேற்பட்டோர் முளைப்பாரி, பால்குடம் எடுத்து ஊர்வலமாக சென்றனர். விநா-யகர் பூஜையுடன் யாக சாலை தொடங்கியது. நேற்று காலை கடம் புறப்பாடும், தொடர்ந்து கும்-பாபிஷேகமும் நடந்தது.


நாமகிரிப்பேட்டை டவுன் பஞ்சாயத்து, அரியா-கவுண்டம்பட்டியில் உள்ள ஏகாம்பரேஸ்வரர் காமாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேக விழா-விற்காக, கடந்த, 19ல் முகூர்த்தகால் நடப்பட்டது. தொடர்ந்து பெருமாள் கோவிலில் இருந்து தீர்த்-தக்குடம், முளைப்பாரி எடுக்கும் நிகழ்ச்சி நடந்-தது. வெள்ளிக்கிழமை மாலை, திருவிளக்கு ஏற்-றுதல், கணபதி பூஜை ஆகியவையுடன் யாக சாலை தொடங்கியது. நேற்று காலை, 10:00 மணிக்கு கலசங்களுக்கு புனிதநீர் ஊற்றி கும்பா-பிஷேகம் நடந்தது. பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

Advertisement