ரயில் பாதையோரம் உள்ள மக்களுக்கு விழிப்புணர்வு
ராசிபுரம்: ராசிபுரத்தில், மல்லுார் செல்லும் ரயில்வே வழித்தடத்தில், மாலை நேரத்தில் சில வாலி-பர்கள் அமர்ந்து மது அருந்துகின்றனர். அதுமட்டு-மின்றி, மது அருந்திவிட்டு பாட்டில்களை அங்-கேயே போட்டுவிடுகின்றனர். மேலும், தண்டவா-ளத்தில் ஜல்லிக்கற்களை வைத்து விட்டு சென்-றுவிடுகின்றனர்.
இதுகுறித்து ரயில்வே நிர்வாகம் பலமுறை கண்டித்தும், இப்பகுதி மக்கள் கண்டு-கொள்ளவில்லை. இந்நிலையில், ரயில்வே போலீசார், ராசிபுரம்-மல்லுார் ரயில்வே வழித்தட பகுதியில் உள்ள பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். தொடர்ந்து இவ்வாறு நடந்தால், சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement