பாலக்காட்டு கருப்பண்ண சுவாமி ஐம்பொன் சிலை கண் திறப்பு விழா

ப.வேலுார்: ப.வேலுார் அருகே, வெட்டுக்காட்டு புதுாரில் பாலக்காட்டு கருப்பண்ண சுவாமி கோவில் உள்-ளது. இக்கோவிலில், பாலக்காட்டு கருப்பண்ண சுவாமிக்கு, ஐம்பொன் சிலை செய்ய அப்பகுதி மக்கள் முடிவு செய்து, அதன் பணிகள் நடந்து முடிந்தன. கடந்த, 31ல் வெட்டுக்காட்டு புதுாருக்கு ஊர் மக்கள், மேளதாளத்துடன் ஐம்பொன் சிலையை கொண்டு வந்தனர். நேற்று முன்தினம், ப.வேலுார் காவிரி ஆற்றுக்கு சென்று புனித தீர்த்தம் கொண்டு வந்து அபிஷேகம் செய்தனர்.



விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக, நேற்று அதி-காலை, 4:00 மணிக்கு பாலக்காட்டு கருப்பண்ண சுவாமி சிலைக்கு கண் திறப்பு நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து, வாசனை திரவியங்களால் அபி-ஷேகம், தீபாராதனை நடந்தது. நேற்று மாலை, 6:00 மணிக்கு ஐம்பொன்னால் செய்யப்பட்ட பாலக்காட்டு கருப்பண்ண சுவாமி திருவீதி உலா நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்-டனர்.

Advertisement