இறுதி ஊர்வலத்தில் தகராறு 3 பேர் மீது வழக்குப்பதிவு

குளித்தலை: குளித்தலை அடுத்த லாலாப்பேட்டை, கொடிக்கால் தெருவை சேர்ந்தவர் குமார், 28; கூலித்தொழிலாளி. இவர், கடந்த, 31ல் கொடிக்கால் தெரு, காமன் கோவில் அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது பிள்ளபா-ளையம் பகுதியில் இருந்த வந்த இறுதி ஊர்வ-லத்தில், பிள்ளப்பாளையம் கிராமத்தை சேர்ந்த பூபாலன், கரன், தீனா மற்றும் சிலர் பட்டாசு வெடித்து, ஆட்டம் ஆடி வந்தனர். அப்போது, குமார், தன் மொபைல் போனில் வீடியோ எடுத்-துள்ளார். இதை பார்த்த அவர்கள், 'எப்படி நீ வீடியோ எடுக்கலாம்' எனக்கூறி, பூபாலன், கரன், தீனா ஆகியோர் தகராறில் ஈடுபட்டுள்ளனர்.


அப்போது, பூபாலன் என்பவர், குமாரை கட்-டையால் தாக்கியுள்ளார். காயமடைந்த குமார் அளித்த புகார்படி, பூபாலன், கரன், தீனா மற்றும் பிள்ளபாளையத்தை சேர்ந்த சிலர் மீது லாலாப்-பேட்டை போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்-றனர்.

Advertisement