மகள் மாயம்: தந்தை புகார்

குளித்தலை: குளித்தலை அடுத்த கீழபஞ்சப்பட்டியை சேர்ந்-தவர் ரமேஷ், 42; இவரது மகள் நிவேதா, 20. திருச்சி தனியார் மகளிர் கல்லுாரியில் படித்து வருகிறார். நேற்று முன்தினம், வழக்கம்போல் கல்லுாரிக்கு சென்றவர் திரும்பவில்லை. மகளை கண்டுபிடித்து தருமாறு ரமேஷ் அளித்த புகார்படி, லாலாப்பேட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.


* குளித்தலை அடுத்த மேட்டு மகாதானபுரத்தை சேர்ந்த சாந்தி மகள் லக்ஷயா, 21; பாலாஜி என்ப-வருக்கு, ௨ ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்து வைத்தனர். கடந்த ஜன., 31ல் கரூர் அரசு கலை கல்லுாரியில் நடந்த வேலைவாய்ப்பு முகாமிற்கு சென்று வருவதாக கூறிவிட்டு சென்-றுள்ளார். அதன்பின், மாலை வரை வீட்டுக்கு வர-வில்லை. மகளை காணவில்லை என, தாய் சாந்தி அளித்த புகார்படி, லாலாப்பேட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement