அம்மன் கோவில்களில் குலதெய்வ வழிபாடு

ஆர்.கே.பேட்டை, ஆர்.கே.பேட்டை அடுத்த, வெள்ளாத்துாரில் அமைந்துள்ளது வெள்ளாத்துாரம்மன் கோவில்.

ஆர்.கே.பேட்டை, ஸ்ரீகாளிகாபுரம், அம்மையார்குப்பம், வங்கனுார், பொதட்டூர்பேட்டை, சொரக்காய்பேட்டை மற்றும் ஆந்திர மாநிலம், புதுப்பேட்டை, சத்திரவாடா உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த நெசவாளர்கள், வெள்ளாத்துாரம்மனை குலதெய்வமாக வழிபட்டு வருகின்றனர்.

ஆடி மற்றும் தை மாதங்களில், அம்மனுக்கு பொங்கல் வைத்து சிறப்பு வழிபாடு நடத்துவது வழக்கம். தை மாதம் திங்கட்கிழமையான நேற்று, நெசவாளர் கிராமங்களில் தறிக்கூடங்களுக்கு கணபதி வழிபாடு நடத்தப்பட்டது. இதை தொடர்ந்து, குலதெய்வம் கோவில்களிலும் பொங்கல் வைத்து சுவாமி தரிசனம் செய்தனர்.

ஆர்.கே.பேட்டை அடுத்த, வெள்ளாத்துாரம்மன் கோவில், பெருமாநல்லுார் ஓசூரம்மன், மேலப்பூடி தோப்பாளம்மன், சொரக்காய்பேட்டை நலம்புரியம்மன், சேரிஅய்யம்பேட்டை அன்னியம்மன் கோவில்களில், நேற்று, திரளான பக்தர்கள், குலதெய்வ வழிபாடு நடத்தினர்.

Advertisement