பூட்டி கிடக்கும் கழிப்பறையால் ஊராட்சி பள்ளி மாணவர்கள் அவதி

திருத்தணி, திருத்தணி ஒன்றியம், பட்டாபிராமபுரம் கிராமத்தில், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி இயங்கி வருகிறது. இங்கு, 80க்கும் மேற்பட்ட மாணவ - மாணவியர் படித்து வருகின்றனர்.

மாணவர்கள் வசதிக்காக பள்ளி அருகே, ஆண், பெண் என தனித்தனியாக கழிப்பறைகள் கட்டி பயன்பாட்டிற்கு விடப்பட்டிருந்தன. இந்நிலையில், முறையாக பராமரிக்காததால் கழிப்பறையை சுற்றியும் செடிகள் வளர்ந்து, சேதம் அடைந்தது.

இதை தொடர்ந்து, மூன்று மாதங்களுக்கு முன், ஊராட்சி நிர்வாகம், 1.25 லட்சம் ரூபாய் மதிப்பில் கழிப்பறைகள் சீரமைத்து வண்ணம் தீட்டப்பட்டது.

ஆனாலும், மாணவர்கள் பயன்பாட்டிற்கு விடாமல் பூட்டியே கிடப்பதால் கழிப்பறையை சுற்றியும் மீண்டும் செடிகள் வளர்ந்து வருகின்றன. இதனால் மாணவர்கள் சிரமப்படுகின்றனர்.

எனவே, மாவட்ட நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுத்து, கழிப்பறையை திறந்து மாணவர்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என, அப்பகுதியினர் எதிர்பார்க்கின்றனர்.

Advertisement