ரோட்டில் மரம் விழுந்து தொழிலாளி நசுங்கி பலி
திண்டுக்கல் : திண்டுக்கல் ரவுண்ட் ரோடு பகுதியில் ரோட்டோர புளியமரம் விழுந்ததில், கூலி தொழிலாளி பலியானார்.
திண்டுக்கல்லை சேர்ந்தவர் குணசேகரன், 50, கட்டட தொழிலாளி. இவர், ரவுண்ட் ரோடு பகுதியில், நேற்று டூ-வீலரில் சென்றார். அப்போது, பழமையான புளிய மரம் திடீரென அவர் மீது சாய்ந்தது. இதில், சம்பவ இடத்திலேயே அவர் இறந்தார்.
தீயணைப்பு துறையினர் மரத்தை வெட்டி அகற்றி, அவர் உடலை மீட்டனர். இந்த மரத்தை அகற்றும்படி, அப்பகுதி மக்கள் மாநகராட்சி அதிகாரிகளுக்கு புகார் கொடுத்தும் அலட்சியமாக இருந்ததால், உயிர் பறிபோனதாக குற்றஞ்சாட்டினர்.
இறந்தவர் குடும்பத்திற்கு நிவாரணம் வழங்கக்கோரி, உடலை வாங்க மறுத்து திண்டுக்கல் அரசு மருத்துவமனை முன் உறவினர்கள் மறியலில் ஈடுபட்டனர். வடக்கு போலீசார் பேச்சுக்கு பின் மறியல் கைவிடப்பட்டது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement