18 மருத்துவ கல்லுாரிகளுக்கு பல்கலை மானிய குழு நோட்டீஸ்


மாணவர்களின் பெற்றோரிடம், ராகிங் எதிர்ப்பு உறுதிமொழி பெறாத 18 மருத்துவ கல்லுாரிகளுக்கு விளக்கம் கேட்டு, பல்கலை மானிய குழுவான, யு.ஜி.சி., நோட்டீஸ் வழங்கியுள்ளது.


கல்லுாரிகள், பல்கலைகள் உள்ளிட்ட உயர்கல்வி நிறுவனங்களில், ஆண்டுதோறும் புதிய மாணவர் சேர்க்கையின் போது, ராகிங் தடுப்பு உறுதிமொழி எடுப்பது அவசியம்.


ஆனால், 'பல கல்வி நிறுவனங்களின் மாணவர்கள், ராகிங் உறுதிமொழியை எடுக்கவில்லை; வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றவில்லை' என, யு.ஜி.சி.,க்கு புகார் தெரிவிக்கப்பட்டது. இதுதொடர்பாக, பெற்றோரிடமும் உறுதிமொழி பெற வேண்டும் என்ற விதி உள்ளது.


இவ்விதியை நாடு முழுதும், 18 மருத்துவ கல்லுாரிகள் பின்பற்றவில்லை. இதையடுத்து, விளக்கம் கேட்டு, 18 கல்லுாரிகளுக்கும் யு.ஜி.சி., நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதில், தமிழகத்தைச் சேர்ந்த இரு மருத்துவ கல்லுாரிகளும் இடம் பெற்றுள்ளன.


கல்லுாரிகள் மீது ஏன் நடவடிக்கை எடுக்க கூடாது என்பதற்கான விளக்கத்தை, ஏழு நாட்களுக்குள் அளிக்க, யு.ஜி.சி., அறிவுறுத்தியுள்ளது. அவ்வாறு விளக்கம் அளிக்கவில்லை எனில், நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.




- நமது நிருபர்-

Advertisement