இந்திய மீனவர்கள் 10 பேர் வவுனியா சிறையிலடைப்பு

ராமேஸ்வரம் : பிப்., 2ல், மன்னார் வளைகுடா கடலில் இந்திய, இலங்கை எல்லையில் மீனவர்கள் மீன் பிடித்தனர். அங்கு கப்பலில் ரோந்து வந்த இலங்கை கடற்படை வீரர்கள், துப்பாக்கியை காட்டி எச்சரித்து மீனவர்களை விரட்டினர்.

இந்திய மீனவர்கள் வேகமாக படகை ஓட்டினர். எனினும், ராமேஸ்வரம் அருகே தங்கச்சிமடம் சதீஷ் என்பவரது படகை இலங்கை வீரர்கள் மடக்கிப் பிடித்தனர்.

படகில் இருந்த மீனவர்கள் எபிரோன், 30, காட்ரூ, 38, உட்பட 10 பேரை கைது செய்து, இலங்கை நாட்டின் வவுனியா சிறையில் அடைத்தனர்.

இதற்கிடையே, கடலில் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக, கைது செய்யப்பட்ட காரைக்கால் மீனவருக்கு, இலங்கை கோர்ட்டில், 40 லட்சம் ரூபாய் அபராதம் மற்றும் 6 மாதம் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. ஒன்பது மீனவர்கள் விடுவிக்கப்பட்டனர்.

Advertisement