காலை நேர பனிமூட்டம் நீடிக்கும்
சென்னை : 'தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில், பிப்ரவரி, 9 வரை வறண்ட வானிலையே நிலவும்' என, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அந்த மையத்தின் அறிக்கை:
வடக்கில் இருந்து வரும் குளிர் காற்று காரணமாக, தமிழகத்தில் அதிகாலை வேளையில், பரவலாக பனி மூட்டம் காணப்படுகிறது. இது, மேலும் சில நாட்களுக்கு நீடிக்க வாய்ப்புள்ளது. அதேநேரத்தில் தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில், பிப்., 9 வரை வறண்ட வானிலையே காணப்படும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், வானம் ஓரளவு மேகமூட்டமாக காணப்படும். நகரில் சில இடங்களில், காலை வேளையில் லேசான பனி மூட்டம் காணப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement